2022 ஜூன் மாதம் 30-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ள ஸ்ரீ அமர்நாத் யாத்திரை தொடர்பாக விரிவான விளம்பரம் செய்வது குறித்து ஶ்ரீநகரில் கூட்டம் ஒன்றை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா கூட்டினார். இந்த கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் அரசின் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தா, அமர்நாத் தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி நிதிஸ்வர் குமார், ஸ்ரீநகர் பத்திரிகைத் தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர், தூர்தர்ஷன் தலைமை இயக்குநர், அகில இந்திய வானொலியின் முதன்மை தலைமை இயக்குநர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள யாத்திரை பற்றிய தகவலைப் பரப்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.