மதரஸா ஆசிரியர் கைது

மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிருதின் அன்சாரி புருலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஹவுராவில் தங்கி உள்ளூர் மதரஸாவில் பாடம் கற்பித்து வருகிறார். மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை (எஸ்.டி.எப்) இவரை அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தது. அவர், ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் (ஜே.எம்.பி) என்ற வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார், அவர்களுக்கு போலி அடையாள அட்டைகள் தயாரித்து உதவியுள்ளார், வடகிழக்கு பாரதத்தில் பல நாசவேலைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் வங்க தேசத்தை சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது.