அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்து நாடுகளுக்கும் எங்கள் செய்தி என்னவென்றால், நாங்கள் விதித்த மற்றும் பரிந்துரைத்த தடைகளுக்கு அந்த நாடுகள் கட்டுப்பட வேண்டும்’ என தெரிவித்தார் அப்போது பாரதம் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெறுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இது அமெரிக்காவின் தடைகளை மீறுவதாக நான் கருதவில்லை. ஆனால் இந்த தருணம் குறித்து வரலாற்று புத்தகங்கள் எழுதப்படும்போது நீங்கள் எங்கு நிற்க விரும்புகிறீர்கள் என்பதையும் சிந்தியுங்கள். ரஷ்ய தலைமைக்கான ஆதரவு என்பது ஒரு படையெடுப்பிற்கான ஆதரவாகும். அது வெளிப்படையாக பேரழிவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என்று கூறினார்.