பாரதியருக்கு போல்ட்ஸ்மேன் விருது

புள்ளியியல் துறையில் இது மிகப்பெரிய விருதாகக் கருதப்படுவது போல்ட்ஸ்மேன் விருது. இத்துறையில் இது நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படுகிறது. 1975 முதல் அறிவிக்கப்பட்டு வரும் இந்த மதிப்புமிக்க விருது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.  அவ்வகையில், 2022ம் ஆண்டிற்கான இந்த விருது பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் தீபக் தார் மற்றும் டாக்டர் ஜான் ஹாப்ஃபீல்ட் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதை பாரத தேசத்தவர் பெறுவது இதுவே முதல் முறை. வடிவியல் கட்டமைப்புகள் (பிராக்டிரல்ஸ்), சுய ஒழுங்கமைக்கப்பட்ட சிக்கலான கட்டமைப்புகள், விலங்குகள் தொடர்பான புள்ளியியல் சிக்கல்கள், காந்தங்கள் மற்றும் கண்ணாடியில் மாறிவரும் கட்டமைப்புகள் ஆகியவற்றின் புள்ளிவிவர ஆய்வுகள், டாக்டர் தீபக் தாரின் ஆராய்ச்சியின் அம்சங்களாகும். பிரபல இயற்பியலாளர் டாக்டர் ரிச்சர்ட் ஃபெய்ன்மேனின் மாணவரான இவர், தற்போது புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (EISAR) இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.  இந்த விருது நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாக அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.