ராமேஸ்வரத்தில் ஹனுமன் சிலை

ஹனுமான்ஜி சார் தாம் திட்டத்தை தொழிலதிபர் ஸ்ரீ நிகில் நந்தா 2008ல் துவக்கினார். இதில் முதல் கட்டமாக  சிம்லாவில் ஜாகு மந்திரில் 2010ல் முதல் சிலை நிறுவப்பட்டர்து. அப்போதைய ஹிமாசலப் பிரதேச முதல்வர் பேராசிரியர் பிரேம்குமார் தூமலால் இதனை திறந்து வைத்தார். இரண்டாவது சிலை குஜராத் மாநிலம் மோர்பியில் 2016ல் தொடங்கப்பட்டது. இப்பணி மார்ச் 2022ல் நிறைவுபெற உள்ளது. இதனையடுத்து தற்போது பிப்ரவரி 23, 2022ல் மிக உயரிய ஹனுமான் சிலை தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 100 கோடி செலவில் அமைக்கப்படும் இச்சிலை அடுத்த 2 ஆண்டுகளில் முழுமைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் பங்கேற்ற ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸ்பளே, “பாரதத்தவர்கள் அனைவருக்குமே ராமேஸ்வரம் மிகவும் புனிதமான இடமாகும். இப்பகுதியில் ஹனுமானுக்கு சிலை அமைப்பது இப்பகுதியின் பெருமையே மேலும் அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் இப்பகுதி மேலும் சுபிக்ஷமடையும். அத்துடன் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் இங்கு வர வழி ஏற்படுத்தும். கடவுள் ராமர் இங்கு இருந்ததாக இதிகாசங்கள் கூறுகின்றன. இதே இடத்தில் அவரது பிரதான சீடரான ஹனுமாருக்கும் சிலை உருவாக்குவது மிகவும் பொறுத்தமாக இருக்கும். அது இந்த நகருக்கும் பெருமை சேர்க்கும்” என்று கூறினார்.