ஹிஜாப் சர்வதேச டூல்கிட்

கர்நாடக ஹிஜாப் விவகாரம் என்பது ஏதோ எதேச்சையாக நடந்த விஷயம் அல்ல, சி.ஏ.ஏ போராட்டம், விவசாய போராட்டம் போன்றே இதுவும் முன்னதாகவே நன்கு திட்டமிடப்பட்டு, அரங்கேற்றப்பட்ட விவகாரம்தான் என்பது மக்களுக்கு மெல்ல புரிய ஆரம்பித்துள்ளது.

இதன் பின்னணியில் பாரதத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், பிரிவினைவாதிகள், சிறுபான்மை அமைப்புகள், பயங்கரவாத இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள், இடதுசாரிகள், பெண்ணிய அமைப்புகள், உள்ளன. இவர்களுக்கு ஆதரவாக சில நாட்டு அரசாங்கங்கள், வெளிநாட்டு சக்திகள், பண முதலைகள் உள்ளதும் வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

இந்த சதித் திட்டத்தில் யார், எதனை, எப்போது, எங்கே பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் போன்ற அனைத்து சதித் திட்டங்களும் முன்னதாகவே திட்டமிடப்பட்டு அதற்கான டூல்கிட் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் தெரிய வருகிறது.

தமிழகத்தில் லாவண்யாவை தற்கொலை செய்துகொள்ள வைத்த மதமாற்ற கும்பல்கள், ஐயப்ப மலை, ருத்திராட்சம், மருதாணி போன்றவற்றுடன் பள்ளி சென்ற மாணவர்களை வெளியே அனுப்பிய பள்ளி நிர்வாகங்கள், தவறிழைத்த ஆசிரியர்கள் என மதவெறி வெளிப்பட்ட பல விஷயங்களை கண்டிக்காத தமிழக அரசியல்வாதிகளும், காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகளும், சில நடிகர்களும், சமுக ஆர்வலர்களும் ஒருமித்த குரலில் சதியில் ஈடுபட்ட முஸ்லிம் மாணவிகளுக்காக பரிந்து பேசுகின்றனர். நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்புகின்றனர். ஊடகங்கள் இவ்விவகாரத்தை ஊதி பெரிதாக்குகின்றன.

பாரதத்தின் உள்நாட்டு பிரச்சனையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பயங்கரவாத அமைப்பான தலிபான்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் அமைச்சர்கள், பிரெஞ்சு கால்பந்து வீரர் பால் போக்பா, மலாலா உள்ளிட்ட பலர் தலையிடுகின்றனர்.

ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் சூழலில், இது பாரதத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கவும், குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதனை செயல்படுத்தவும் நடத்தப்படும் ஒரு சர்வதேச சதி. இதற்கு உள்நாட்டு கைகூலிகளும் உடந்தை என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. சி.ஏ.ஏ, விவசாய போராட்டங்களிலும் இதுபோன்றே பல விஷயங்களை இவர்கள் செயல்படுத்தினர் என்பது சிந்திக்கத்தக்கது.

மதிமுகன்