சி.பி.ஐ விசாரணையில் சஞ்சித் கொலை வழக்கு

கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று, பாலக்காட்டின் எல்லப்புள்ளியில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தைச் சேர்ந்த சஞ்சித் தனது மனைவி கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டார். பட்டப்பகலில், காரில் வந்த மர்மநபர்கள், சஞ்சித்தின் பைக்கை வழிமறித்து, அவரது மனைவி உட்பட பலர் முன்னிலையில் சரமாரியாக அவரை தாக்கிக் கொன்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பயங்கரவாத இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பி.எப்.ஐ) அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் விசாரணை முறையாக நடைபெறாததால், சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணை கோரி சஞ்சித்தின் மனைவி அர்ஷிகா கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் கேரள மாநில காவல்துறையின் அதிகார வரம்பிற்கு வெளியேவும் விசாரிக்க வேண்டியுள்ளதால், இதனை சி.பி.ஐ விசரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.