கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில், ஹோசதுர்கா காவல் நிலையத்தில் வசந்த குமார் என்பவர் ஒரு புகார் அளித்துள்ளார். அவரது புகாரில், “என் மனைவி சரளாவும் அவரது பெற்றோரும் கடந்த ஆறு வருடங்களாக கிறிஸ்தவ மதத்தை கடைபிடித்து வருகின்றனர். திருமணத்திற்கு முன்பு என்னை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவ முறைப்படி புனித நீராட வைத்தனர். 2020 ஜூலையில் கிறிஸ்தவ முறைப்படி சரளாவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கிறித்துவத்தில் நம்பிக்கை இல்லை, ஒரு மாதத்தில் மீண்டும் நாங்கள் ஹிந்து மதத்திற்கு சென்றோம். என் மனைவியை கிறிஸ்துவத்தை விட்டு வெளியேற அவளது பெற்றோர் அனுமதிக்கவில்லை. அவர்கள் ‘ஹிந்து தெய்வங்கள் தீயவை, அவற்றை வணங்கினால் நரகத்திற்குச் செல்ல வேண்டும்’ என கூறினார். ஹிந்து கடவுள்களின் புகைப்படங்களை கிழித்து எரித்தனர். இந்நிலையில் எங்களுக்கு குழந்தை பிறந்தது. ஜனவரி 18 அன்று குழந்தையை பார்க்க நான் சென்றபோது மனைவியின் பெற்றோரும் சகோதரர்களும் என்னை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர். குழந்தையை பார்க்க வேண்டும் என்றால் கிறிஸ்தவத்திற்கு மாற வற்புறுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.