கேரளத்தில் பசியால் வாடிய இளைஞன் ஒருவனை அரிசி திருடினான் என்று சொல்லி அடித்தே கொன்றார்கள். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மனநிலை சரியில்லாத அவனிடமிருந்த அரிசி ஒரு கிலோ மட்டுமே. இந்த மனிதாபிமானமற்ற செயலை ஊடகங்கள் விவாதிக்கவில்லை.
செங்கற்பட்டு அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் கிறிஸ்தவ பாதிரி நடத்துகிற ஆதரவற்றோர் காப்பகத்தில் 1590 முதியோர்களைக் கொன்று அவர்களின் உறுப்புகளை, எலும்புகளை வியாபாரம் செய்த அக்கிரமங்கள் பற்றி ஊடகங்கள் விவாதிக்கவில்லை.
திரிபுராவில் 20 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிசம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. நேற்றுவரை ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத பாஜக இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை உள்ள மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து ஊடகங்களில் விவாதிக்கப்படவில்லை…
சென்னை ஐஐடியில் நடைபெற்ற ஒரு விழாவில் துவக்க நிகழ்ச்சியில் கடவுள் வாழ்த்தாக ஸ்ரீ மஹா கணபதி” என்ற சம்ஸ்கிருத பாடலை பாடினார்கள். ஏதோ பெரிய தவறு நடந்துவிட்டதைப் போன்று அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களும் விவாதங்கள் நடத்தின.
விவாதம் நடத்துவது மட்டுமல்ல… நடத்துகின்ற ‘நெறியாளர்கள்’ கூட பாரபட்சமாக ஹிந்து விரோத போக்கையே கடைப்பிடிக்கிறார்கள்.
பாரத ஊடகங்கள் இருப்பது மிஷனரி செல்வாக்கிலா, அரபு செல்வாக்கிலா? துருவ வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது.
மிஷனரி செல்வாக்கிலா, அரபு செல்வாக்கிலா சந்தேகமே வேண்டாம் வெறும் 5 ரூபாயில் அல்லது 6 ரூபாயில் பத்திரிகை நடத்தினால் கோடீஸ்வரனாக வாழ முடியுமா..