பாரதத்தில் உள்ள சுமார் 5 கோடி மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு, ஐயாயிரம் ரூபாய் ஓவர் டிராஃப்ட் வசதியை மத்திய அரசு விரைவில் துவங்கவுள்ளது. சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் கிளைகளுக்குச் சென்று இந்த வசதியை பெறமுடியும். கடந்த 2019 – 20 நிதிநிலை அறிக்கையில், நிதியமைச்சர் உரையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஓவர் டிராஃப்ட் என்பது நாம் வைத்துள்ள நடப்பு கணக்கில், கடனாக நிலுவைத் தொகையை விட அதிகமாக பெற அனுமதிக்கப்பட்ட ஒரு ஏற்பாடாகும்.