முத்திரை பதித்த முத்ரா

பிரதமரின் முத்ரா திட்டம் கடந்த  2015 ஏப்ரலில் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 32.11 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுமார் ரூ 17 லட்சம் கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு, உத்தரவாதம் அளிப்பவர் அல்லது பிணையம் தேவை இல்லை. எளிமையான ஆவணங்கள், விரைவான செயலாக்கம், கடன் அளிப்பவர்களின் செயல்திறன் மிக்க அணுகுமுறை முத்ரா திட்டத்தை பிரபலப்படுத்தி உள்ளன. பிரதமரின் முத்ரா திட்ட கடன்கள், வணிகத்தின் நோக்கத்தையும் லாபத்தையும் அதிகரிக்க உதவியுள்ளன. முத்ரா திட்டத்தின் கீழ், பல்வேறு வகைகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதாவது சிசு திட்டத்தில் ரூ. 50,000 வரை கடனும், கிஷோர் திட்டத்தில் ரூ. 50,001 முதல் ரூ. 5 லட்சம் வரையிலான கடனும் தருண் திட்டத்தில் ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சம் வரையிலான கடனும் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு மாதிரி கணக்கெடுப்பின்படி, இத்திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 1.12 கோடி நிகர கூடுதல் வேலைவாய்ப்புகள் இதனால் உருவாக்கப்பட்டு உள்ளன என மத்திய நிதி இணை அமைச்சர் பகவத் கிசன்ராவ் காரத் தெரிவித்தார்.