காங்கிரஸ்காரரை கொன்ற கம்யூனிஸ்ட்டுகள்

கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆட்சியில் உள்ளது, அதன் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றனர். அவ்வகையில், 2019 பிப்ரவரியில் காசர்கோடு பெரிய கிராமத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கிருபேஷ், சரத் லால் ஆகியோர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் கேரள காவல்துறை முறையாக விசாரிக்காததால் இறந்தவர்களின் குடும்பத்தினர் சி.பி.ஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறையிட்டனர். சி.பி.ஐ விசாரணையை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் கம்யூனிஸ்ட் அரசு கடுமையாக எதிர்த்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கை விசாரித்த சி.பி.ஐ தற்போது தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.வி.குன்ஹிராமன் உட்பட 24 பேர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.