ஏற்கனவே உள்ளது ஒமைக்ரான்

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சி.எஸ் ஐ.ஆர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா, ‘உருமாறிய கொரோனா வைரஸ் ஒமைக்ரான் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது, அங்கிருந்து பல நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பாரதத்தில் ஏற்கனவே சிலரிடம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லவில்லை. பல முக்கிய நகரங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவியிருக்கலாம். எனினும் ஒமைக்ரானின் அறிகுறிகளும் பாதிப்புகளும் குறைவாக இருப்பது ஆறுதலான விஷயம். இருசக்கர வாகனங்களில் செல்வோர் ‘ஹெல்மெட்’ அணிவது அவசியம், அதேபோல கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம். ஹெல்மெட் அணிந்திருந்தாலும் விபத்து ஏற்படலாம். அதேபோல தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்றால் பாதிக்கப்படலாம். ஆனால் இரண்டுமே உயிரை பாதுகாக்கும்’ என்று கூறினார்.