பாரதம் இல்லாமல் இது முடியாது

பாரதத்திற்கான ஜெர்மன் நாட்டின் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘கிளாஸ்கோ மாநாடு நாடுகள் ஒன்றுக்கொன்று தேவை என்பதை நிரூபித்துள்ளது. இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு ஐந்தாவது நபரும் ஒரு பாரத தேசத்தவர் மற்றும் ஒரு சீனர். பாரதம் இல்லாமல் உலக நாடுகளின் சவால்களுக்கு தீர்வு இல்லை. நாங்கள் பாரதத்துடன் ஒரு மூலோபாய கூட்டணி கொண்டுள்ளோம். இது மிகச் சில நாடுகளுடன் நாங்கள் வைத்திருக்கும் முக்கிய கூட்டணிகளுல் ஒன்று.  உறவுகளை மேம்படுத்த இரு நாட்டு அரசாங்கங்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன’ என கூறினார்.