‘தெய்வம் ஒன்றே. அதை பலப்பல பெயர்களில் அழைக்கிறோம். இதுதான் ஹிந்துத்துவம். ஹிந்துத்துவம் என்பது ஒரு மதம் இல்லை. அது ஒரு வாழ்க்கை முறை. எம்மதமும் சம்மதம் என்பதை ஏற்றுக் கொண்டவன் ஹிந்து மட்டுமே.
‘இயேசு’ ஒருவர்தான் ஒரே கடவுள். இயேசுவை வணங்காதவர்கள் பாவிகள் என்கிறது கிறிஸ்தவம். அதேபோல ஒரே ஒரு கடவுள் தான் உண்டு. அவர்தான் ‘அல்லா’ என்கிறது இஸ்லாம். இஸ்லாம் அல்லாதவர்களை ‘காபிர்’ என்று அழைக்கின்றனர். காபிர்கள் கொல்லப்படவேண்டியவர்களாம்!
மதத்தின் பெயரால் கிறிஸ்தவமும் இஸ்லாமும் உலகில் எத்தனையோ நாடுகளில் ரத்த ஆறு ஓட்டியுள்ளன. கோவாவில் சேவியர் என்ற பாதிரி மதம் மாற மறுத்த 5,000 ஹிந்துக்களை சித்திரவதை செய்து கொன்றார். மாப்ளா வெறியாட்டமும் திப்புவின் கொடூரமும் மக்கள் நன்கு அறிந்த கோரங்கள். இந்த இரண்டு மதங்களும் தங்களது மதத்தைப் பரப்ப கொடூர வழிகளை கடைப்பிடிப்பவைகள்.
உண்மை வரலாறு இவ்வாறு இருக்க, நடிகர் கமலஹாசன் தமிழகத்தில் ஹிந்து பயங்கரவாதம் வளர்ந்து வருகிறது என்று ஒரு வாரப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
அமைதியான விழாவை ஆடம்பரமாக்கும் போக்கு என்று விநாயகர் சதுர்த்தி விழாவை சாடியுள்ளார். விநாயகர் சதுர்த்தி விழாவை பிரம்மாண்டமாய் நடத்தக் கூடாதா? அதில் என்ன தவறு?
சமூக சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக கேரளா இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு அரசியல் குருவாக கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயனை ஏற்றுக் கொண்டதால் வந்த குழப்பம் இது. கேரளத்தில் மாற்றுக் கட்சிகளின் மீது கம்யூனிஸ்ட்காரர்களின் கொலை வெறித் தாக்குதல் தெரியாதது போல் நடிக்கிறார் இந்த நடிகர்.
அங்கே கிறிஸ்தவர்களின் மதமாற்றம், முஸ்லிம்களின் பயங்கரவாதம், அவர்களின் லவ் ஜிகாத் எதுவும் கமலஹாசனின் பார்வையில் படவில்லையோ?
கமலஹாசனிடம் ‘ஹிந்து பயங்கரவாதம்’ பற்றி ஆதாரம் இருக்கும் போலிருக்கிறது. எனவே விரைவில் தேசிய புலனாய்வு முகமை (N.I.A.) கமலஹாசனின் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் சென்று விசாரித்துக் கொள்ள வேண்டும்” என்று சுப்ரமணியன் சுவாமி கொளுத்திப் போட்டிருப்பது கமலின் பொறுப்பற்ற பேத்தலுக்கு ஆப்பு.
சூடான ஐஸ்கிரீம் என்று ஒன்று கிடையாது. அது போல ‘ஹிந்து பயங்கரவாதம்’ என்று ஒன்று இருக்க முடியாது.