டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் பாரதம் தோல்வி அடைந்ததை முன்னிட்டு நமது பாரதத்தில் உள்ள பாகிஸ்தான் விஸ்வாசிகள் அதனை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். பாரத மண்ணில் வாழ்ந்துகொண்டே இதன் உணவை உண்டுகொண்டே சொந்த நட்டுக்கே துரோகம் செய்யும் நன்றி கெட்ட இவர்களது செயலை கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெளியிட்டுள்ள செய்தியில், “தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பகுதிகளில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாட பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அவர்கள் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடியிருப்பார்களோ? தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதால் மட்டும் என்ன பாதிப்பு?” என இதன் பின்னணியில் உள்ள இடதுசாரிகள், லிபரல்கள், அரசியல்வாதிகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் இணைந்து செய்யும் பாசாங்குத்தனத்தை கேள்வி கேட்டுள்ளார். இதனால், அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.