ஹிந்து ராஷ்ட்ரம் இதுதான்!

ஜெர்மனி நாடு யாருடையது? ஜெர்மனியர்களுக்கானது. பிரிட்டன் நாடு பிரிட்டிஷ்காரர்களுக்கானது. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது. அதேவழியில் ஹிந்துஸ்தான் என்பது ஹிந்துக்களுக்கானது. அதற்காக, ஹிந்துஸ்தான் மற்ற மக்களின் நாடு அல்ல என்று அர்த்தம் இல்லை. பாரதமாதாவின் மகன்கள், இந்திய முன்னோர்களின் சந்ததியினர், இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழ்கின்ற அனைவரையும் ‘ஹிந்து’ என்ற வார்த்தை உட்படுத்துகிறது. எந்த ஒரு தலைவரோ அல்லது கட்சியோ நாட்டை பெரிதாக மாற்றமுடியாது. ஆனால் ஒரு மாற்றம் தேவை, நாம் அதற்கு சமுதாயத்தை தயார்படுத்த வேண்டும்.

அக்டோபர் 27 அன்று இந்தூர் (ம.பி) கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கூட்டம் ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியதிலிருந்து.