பாதுகாப்புப் படைகள் நமது கௌரவம்

நமது ராணுவப்படையின் துணைத்தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மொஹந்தி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், சில விமர்சகர்கள், நமது மத்திய அரசு ஆயுதப்படைகளில் பெரும் பணத்தை செலவு செய்வதாகக் கூறிய கருத்துகளை மறுத்தார். மேலும், ‘அக்காலத்தில் இருந்தே திபெத்தில் ஆயுதப்படைகள் வலுவாக நிலைப்பெற்றிருந்தால் சீனர்கள் ஒருபோதும் படையெடுத்திருக்க மாட்டார்கள். பாதுகாப்புத் துறையில் நம் நாடு முதலீடு செய்யாமல் இருந்திருந்தால், ஒருவேளை நாம் கார்கில், டோக்லாமில் நடந்த போர்களில் தோற்றிருக்கலாம். டோக்லாம் மற்றும் கல்வானில் நடந்த சம்பவங்கள் நமது நாட்டின் கௌரவத்தை அதிகரித்துள்ளது. சர்வதேச அரங்கில் நமது நாட்டிற்கு மிகப் பெரிய அந்தஸ்தை அளித்துள்ளது. இன்று அனைவரும் பாரதத்தை அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கும் நாடாகப் பார்க்கின்றனர். பாரதத்தின் ஆயுதப்படைகள் தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம். அது இனம், ஜாதி மதத்தைக் கடந்தது. நமது ஆயுதப்படைகளுக்கு எந்த அரசியல் அபிலாஷைகளும் இல்லை. அதேசமயம் நாட்டின் அரசியலை மிகவும் மதிக்கிறோம்’ என கூறினார்.