அசாம் அரசு, நிலக் கொள்கை சட்டத்தின்படி இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தது. எனினும் அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஒப்புக்கொண்ட்து. அங்குள்ள முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இது குறித்து பேசிய பிறகே நில மீட்புப் பணி துவங்கியது.
முறையாக காலி செய்ய நோட்டீசும் வழங்கப்பட்டது. எனினும், 10 ஆயிரம் ஆக்கிரமிப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரைத் கற்கள், கத்தி, கூர்மையான மூங்கில் கம்புகள் கொண்டு தாக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 9 காவல்துறையினர் காயமடைந்தனர். தற்காப்பிற்காக காவலர்கள் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
இதற்கு நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். தற்போது, நிலைமை அங்கு கட்டுக்குள் உள்ளது. சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களின் வெளியேற்றத்தினால் மகிழ்ச்சி அடைவதாக அசாம் பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.