டிரிங்க் என்ற புதிய வகை வைரஸ், ஆன்ட்ராய்டு அலைபேசிகளில் ஊடுருவி, அதில் உள்ள வங்கி விவரங்களை திருடுவதாக மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு எச்சரித்துள்ளது. குறிப்பாக 27 வங்கிகளின் வாடிக்கையாளர்களை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசை அனுப்பும் நபர்கள், வருமான வரித்துறை அனுப்புவது போல் போலி குறுஞ்செய்திகள் அனுப்பி அதன் வாயிலாக அலைபேசிக்குள் ஊடுருவுகின்றனர்.
குறுஞ்செய்தியில் உள்ள இணையதள முகவரிக்குள் நுழைந்த பிறகு டவுன்லோடு ஆகும் அந்த செயலி, அலைபேசியின் எஸ்.எம்.எஸ் போன் கால் போன்றவற்றை கண்காணிக்கும். பின்னர் ஆதார் எண், பான் எண், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு உள்ளிட்ட வங்கி விவரங்களையும் திருடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.