வெளிநாட்டு நன்கொடைக்குத் தடை

அரசு சாரா தொண்டு அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடைகளை பெறுவதற்கு எப்.சி.ஆர்.ஏ உரிமம் கட்டாயம். மதமாற்றம், நிதி முறைகேடு, தவறான கணக்குத் தாக்கல், வருமான கணக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால், கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம் அறக்கட்டளைகள் உள்ளிட்ட 6 அமைப்புகளுக்கான எப்.சி.ஆர்.ஏ உரிமம் 180 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு எப்.சி.ஆர்.ஏ., உரிமம் நிறுத்திவைக்கப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.