இங்கிலாந்தில் ஹிந்து கோயில் சேதம்

இங்கிலாந்தில் ஸ்விண்டன் நகரில் உள்ள முக்கிய இடங்களில் ஒன்றான ஹிந்து கோயிலில் சில மர்ம நபர்கள் நுழைந்து அங்குள்ள சுவாமி சிலைகளை சேதப்படுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கான பௌண்டுகள் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இப்பகுதியில் உள்ள ஒரே ஹிந்து கோயில் இதுதான். மேலும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இக்கோயில் கடந்த 18 மாதங்களில் மூடப்பட்டிருந்தது. விழாக்காலம் துவங்குவதால் இங்குள்ள ஹிந்து சமூகம் ஆர்வமுடன் தங்களது இயல்பான இறை வழிபாட்டு நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆவலுடன் இருந்த இந்நேரத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது அங்கு வாழும் ஹிந்துக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.. இக்கோயில் இப்படி மர்ம நபர்களால் தாக்கப்படுவது இது ஐந்தாவது முறை.