ஆப்கானிஸ்தானில் 85 பில்லியன் மதிப்பிலான போர் தளவாடங்களை தலிபான் பயங்கரவாதிகளிடம் தாரைவார்த்துவிட்டு பின்வாங்கிய ஜோபிடென் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், அந்த ஆயுதங்கள் குறித்தத் தகவல்களை ஃபெடரல் பாதுகாப்பு ஏஜென்சிக்களின் வலைத்தளங்களிலிருந்து நீக்கியுள்ளது. ஜோ பிடென் நிர்வாகம் மீது உலக நாடுகள், அந்நாட்டு மக்கள், ராணுவ வீரர்கள் என அனைவரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால், ஜோ பிடன், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி, ‘இது ஆப்கானிய நட்பு நாடுகளை பாதுகாக்கும் நடவடிக்கை’ என்று கூறி வருகிறார். அமெரிக்க ராணுவம் விட்டு சென்ற பிளாக் ஹாக் ஹெலிகாப்டர், துப்பாக்கிகள், சிறிய தூர ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராணூவ தளவாடங்களை தலிபான்கள் பயன்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் பரவி வருகின்றன.