புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரப் பிரியங்கா, ‘மகளிர் மட்டும் பயணிக்க சி.சி.டி.வி பொருத்தப்பட்ட பிங்க் பேருந்துகள் வாங்கப்படும். சனிக்கிழமை அன்று பெண்களுக்கு என்று தனியாக ஓட்டுநர் உரிமம் வழங்கும் நாளாக அறிவிக்கப்படும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் காற்று மாசுபடுவதைக் குறைக்கவும் ஏதுவாக, அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 50 சதவீத சாலை வரி தள்ளுபடி அளிக்கப்படும். மின்சாரத்தில் இயங்கும் இ ரிக்ஷா பயன்பாட்டைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய அரசு திட்டத்தின் கீழ் 200 புதிய பேருந்துகள் வாங்கப்படும்’ என தெரிவித்தார்.