கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலிற்கு சென்ற உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் அங்கு வழிபாடு நடத்தினார். பின்னர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.ஒய்) திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 2 லட்சத்து 853 பயனாளிகளுக்கு 1,341.17 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி உதவியை வழங்கினார். அப்போது பேசிய யோகி, ‘பிரதமர் மோடியின் முன்முயற்சியின் கீழ், 2022ம் ஆண்டிற்குள், இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் வீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த நான்கரை வருடங்களில் உ.பியில் PMAY-G, PMAY-U திட்டங்களின் கீழ் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை ஏழைகளுக்கு வழங்கியுள்ளது. 2017க்கு முன்புவரை இதுபோன்ற என்த வசதியும் உ.பி மக்களுக்குக் கிடைக்கவில்லை. ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசத்திலேயே முதலிடத்தில் உள்ளது உத்தர பிரதேச அரசு’ என கூறினார்.