சென்னை, உயர்நீதிமன்றத்தில் ஒகேனக்கல்லில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சாலை விபத்து குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘புதிய வாகனத்தை வாங்கும் போது அது எப்படி செயல்படும், என்ன்னென்ன வசதிகள் என அறிவதில் ஆர்வம் காட்டும் மக்கள், காப்பீடு நடைமுறைகள் குறித்து முழுமையாக அறிய ஆர்வம் காட்டுவதில்லை. விற்பனையாளர்களும் காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையான தெரிவிப்பதில்லை. வரும் செப்டம்பர் 1 முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணிகள் என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், ‛பம்பர் டூ பம்பர்’ என்ற அடிப்படையில் ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இதுதொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.