பிழைகள் திருத்தப்படும்

மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள ‘நௌ இந்தியா’ (knowindia.gov.in) இணையதளத்தில் பாபர், அக்பர், ஔரங்கசீப் போன்ற முஸ்லிம் படையெடுப்பாளர்கள், ஆக்கிரமிப்பாளர்களின் அட்டூழியங்கள், ஹிந்துக்களுக்கு இழைத்த கொடுமைகள் மறைக்கப்பட்டு அவர்களை சிறந்த ஆட்சியாளர்களாக மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. இது சமூக வலைத் தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரச்சாரகர் ரத்தன் சாரதாவும் இதனை சுட்டிக்காட்டியிருந்தார்.  நேற்று நமது விஜயபாரதம் மின்னிதழிலும் இது குறித்த செய்தி வெளியானது. இதனையடுத்து, கலாச்சார அமைச்சகம் அந்த வலைத்தளத்தை இயக்கவில்லை என்று அறிவித்தது. மேலும், வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக சித்தரிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.