கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி விஜய பாரதம் வார இதழில் பறையர் என்ற சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் மிகவும் மோசமான பொருள் தந்து, திரித்து பல்லாண்டுகளாக இவ்வாறு வெளியிட்டு வருவதை கண்டித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அதை படித்துவிட்டு நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளும், பா.ஜ.கவின் செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செயலை கண்டித்து கருத்து வெளியிட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட என்று எப்படி படித்தாலும் பொருளே தராத ஒரு சொல்லை பழம்பெரும் அகராதி என்று கூறிக்கொள்ளும் ஆக்ஸ்போர்டு அமைப்பு எப்படி வெளியிடலாம் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இக்கட்டுரை பலரது கவனத்தை இது ஈர்த்துள்ளது. அது குறித்த அவரது பேட்டியின் வீடியோவை https://www.youtube.com/watch?v=Dn1U2HHbwVw என்ற இணைப்பில் காணலாம்