ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியான நிலையைக் கருத்தில் கொண்டு, பாரதத்திற்கு வர விரும்பும் ஆப்கானிஸ்தானியர்களுக்கு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்க புதிய வகை இ – விசா எனப்படும் மின்னணு விசாக்களை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் மதபேதம் பார்க்கப்படுகிறது என்ற கருத்தை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.