அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த சுரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ல் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல்குழு நியமிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக இருப்பார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக தற்போது வேல்ராஜ் பணிபுரிந்து வருகிறார். இவர் 33 ஆண்டுகள் பேராசிரியர் அனுபவம் கொண்டவர்.