பள்ளி சத்துணவு பயன் தர: கேழ்வரகு கைகொடுக்கும்!

நம் நாட்டில் ஊட்டச் சத்து பற்றாக்குறை, மிக அதிக அளவு உள்ளது என்பதை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சுட்டிக்

காட்டியுள்ளார். உலகிலேயே ஊட்டச்சத்து பற்றாக்

குறையால் கடும் பாதிப்புக்கு இலக்காகியுள்ள நாடு இந்தியாதான் என்பது தொடர்பான புள்ளி

விவரங்களையும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஊட்டச்சத்து பற்றாக்குறையை சாதாரண பிரச்சினையாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மாணவர்களின் கற்றல் திறன் கடும் பாதிப்புக்கு இலக்காகிறது. எந்த சமுதாயத்தில் மாணவர்களின் திறன் எழுச்சிகரமாக இருக்கிறதோ அந்த சமுதாயம் நிமிர்ந்து ஓங்கும். மாணவர்களின் திறன் நலிவுற்றள்ள சமுதாயம் வீழ்ச்சி அடையும். எனவே மனித மூலதனத்திற்கு ஊறு ஏற்பட துளியும் இடம் கொடுக்கக்கூடாது.

பள்ளிக்கூடங்களில் சத்துணவு அளிக்கப்படு

கிறது என்பது உண்மைதான். ஆனால் இது எந்த அளவுக்கு மாணவர்களுக்குத் தேவையான சத்தை அளிக்கிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வெறும் வெள்ளை அரிசியை மட்டும் சமைத்து போட்டுக்கொண்டிருக்கக் கூடாது. சத்து மிகுந்த சிவப்பு, கருப்பு அரிசி போன்றவற்றையும் மாதம் இரு முறையோ அல்லது வாரம் ஒருமுறையோ சமைத்துப் போட முன்வருவது விரும்பத்தக்கது.

கேழ்வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது மாணவர்களுக்கு சமைத்துப் போட்டால், அது உண்மையிலேயே சத்துணவாக இருக்கும். சில மாநிலங்களில் சிறுதானிய உணவு, மாதத்தின் குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படு

கிறது. இதை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பாரதம் முழுவதும் இதை விரிவுபடுத்தலாம்.

பீட்சா, பர்கர் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் வயிறு நிரம்பிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இத்தகைய உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாறாக வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றை சாப்பிடுவதன் வாயிலாக உடல் ஊட்டம் பெற முடியும். இதுபற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஆசிரியர்கள் ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சத்துணவு பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது கடினமானது அல்ல. ஆனால் இந்த பிரச்சினையின் பரிமாணத்தை உணர்ந்தால் மட்டுமே விழிப்புணர்வு வலுப்படும்.

சத்துணவு பற்றாக்குறையால் முதியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஒருவகையில் முதியவர்களும் குழந்தைகளைப் போன்றவர்களே. சத்துணவு பற்றாக்குறையாக இருந்தால் நோய் எதிர்ப்புத் திறன் குன்றுகிறது. எனவே குழந்தைகளுக்கு சத்துணவுப் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதில் கவனம் செலுத்துவதைப் போல முதியவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.