முகலாய மன்னர் ஔரங்கரசீப்பால், வாரணாசியின் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்டு அங்கு ஞானவாபி மசூதி கட்டப்பட்டது. எனவே, அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. தொல்லியல் துறை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை சன்னி வஃக்பு வாரியம் எதிர்த்து மனுத் தாக்கல் செய்தது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஞானவாபி மசூதி நிர்வாகம் அதன் வளாகத்திற்கு வெளியே உள்ள 1,700 சதுர அடி நிலத்தை காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளையின் நடைபாதை திட்டத்திற்கு வழங்கியுள்ளது. பதிலுக்கு காசி விஸ்வநாதர் கோயில் தரப்பில் 1,000 சதுர அடி நிலம் மசூதிக்கு பரிசளிக்கப்பட்டது. ‘மசூதிக்கு ஒப்படைக்கப்பட்ட நிலம், ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிறப்பு பகுதி மேம்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. நிலத்துக்கும் மசூதியுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நிலத்தை வக்ஃப் சொத்து என்பதால் வாங்க முடியாது. எனவே அதை பரிமாறிக்கொண்டோம்’ என ஞானவாபி மசூதியின் பராமரிப்பாளர் எஸ்.எம்.யாசின் கூறியுள்ளார்.