கர்நாடகாவில் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் நேற்று கர்நாடகா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்த பி.எஸ். எடியூரப்பா, தமது ராஜிநாமா கடிதத்தையும் மாநில ஆளுநரிடம் அளித்தார். முன்னதாக, கர்நாடாக சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க பேசிய எடியூரப்பா, ‘முதல்வர் பதவியில் இருந்து நான் விலகுவது துயரத்தால் அல்ல, இதை மகிழ்ச்சியாகவே செய்கிறேன். மாநிலத்தில் சேவையாற்ற எனக்கு வாய்ப்பு அளித்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எனது நன்றியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிறரது விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக கட்சிக்காக உழைப்பேன்,” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.