நியூஸ் 1 இந்தியா என்ற தொலைக்காட்சி சேனலில் விவசாயப் போராட்டத் தலைவர் ராகேஷ் திகாயத்தை பேட்டி கண்ட கரிமா சிங், கடந்த 2014 தேர்தலில் ஜாட் சமூகத்தினர் வாக்குகளை மோடிக்கு பெற்றுத்தந்து வெற்றி பெற வைத்தது நான்தான் என கூறினீர்கள். ஆனால், அங்கு இரண்டுமுறை நீங்கள் போட்டியிட்டபோது ஏன் மோசமாக தோற்றீர்கள் என கேள்வி கேட்டார். இதனால் சங்கடமடைந்த ராகேஷ், ஆம் மக்கள் என்னை தோற்கடித்தனர் என ஒப்புக்கொண்டார். இது அவரது உண்மையான பலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மேலும், விவசாயிகள், ஜாட் சமூகத்தினர் என யாரும் அவரது பின்னால் இல்லை என்பதும், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களும்தான் இவரை இயக்குகின்றனர் என்பதும் இதனால் தெரியவந்துள்ளது. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஜில்லா பரிஷத் தேர்தலில், ராகேஷ் திகாயத்தின் சொந்தத் தொகுதியில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.