ஏகநாத் ரானடே விவேகானந்தா கேந்திரத்தின் தலைவராக இருந்தார். அவருடைய நண்பர் ஒவ்வொரு வருடமும் அவருக்கு இரண்டு பட்டுச் சட்டைகளை அன்பளிப்பாக அனுப்பி வந்தார். அதனால் அவர் எப்போதுமே அந்தச் சட்டைகளை அணிவது வழக்கமாகி விட்டது.
ஒருநாள் வேரொரு நண்பர் அவரிடம் நீங்கள் பட்டுச் சட்டை மட்டும்தான் போட்டுக் கொள்வீர்களா?” என்று கேட்டார்.
இந்த கேள்வி ஏகநாத்ஜிக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது. அவர் பட்டுச் சட்டை விலை கொடுத்து வாங்கவில்லை என்றாலும் பார்ப்பவர்களுக்கு அது இலவசமாக வந்தது என்பது தெரிய வாய்ப்பில்லை. இது தனது பொறுப்பிற்கு கௌரவம் இல்லை என்பதை உணர்ந்த அவர் பட்டுச் சட்டைகளை அணிவதையே நிறுத்திவிட்டார்.
தொண்டு பணிகளில் ஈடுபடுகிறவர்களை மக்கள் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவர் சார்ந்திருக்கும் ஸ்தாபனம் நல்லதா கெட்டதா என்பது போன்ற அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்வார்கள்.
நாம் நல்லவர்களாக இருப்பது மட்டும் போதாது. நாம் பணி செய்யும் மக்களுக்கும் நாம் நல்லவர்கள் என்பது அவர்கள் கண்ணெதிரில் தெரியவேண்டும்.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்