ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது ஓய்வூதிய தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன், அந்த விவரங்களை ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக குறுந்தகவல், இ-மெயில், வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்துமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதில், மாதாந்திர ஓய்வூதிய தொகை, வரி விலக்குகள் (ஏதேனும் இருந்தால்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.