பாரதத்தின் உதவி தேவைப்படும்

தலிபானுடனான சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், பாரதத்தின் ராணுவ உதவி எங்களுக்கு தொடர்ச்சியாக பல ஆண்டுகள் தேவைப்படலாம் என பாரதத்திற்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஃபரித் மமுண்ட்சே தெரிவித்துள்ளார். ஆனால், அது நேரடி ராணுவ உதவியாக இருக்காது. ராணுவப் பயிற்சியாகவே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். பாரத ராணுவம், ஆப்கன் அரசுப் படைகளுக்கு பயங்கரவாத தடுப்பு, விமானப் பயிற்சி, தொலைத்தொடர்புப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை ஏற்கனவே வழங்கி வருகிறது. மேலும், எம்.ஐ 24 வி ஹெலிகாப்டரையும் வழங்கியுள்ளது. ஆப்கனில் இலவசமாக நாடாளுமன்றக் கட்டடம், அணை கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான உதவிகளையும் பாரதம் தொடர்ந்து செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.