கொரோன தொற்றுக்கு 3வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. இதனால் பல்வேறு நாட்டு அரசுகளும் வேறு வழியின்றி அதற்கு நட்வடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், 3வது டோஸ் போட அனுமதி அளிப்பதற்கு போதிய அறிவியல்பூர்வ ஆதாரமும், தரவுகளும் இல்லை. அதற்குப் பதிலாக, பணக்கார நாடுகள் தங்களிடம் மீதமுள்ள தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்குப் பகிர்ந்தளிக்க முன்வர வேண்டும். உலகளவில் உயிரிழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் ஐ.நாவின் கோவாக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும்’ என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.