அ.தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கின்றன. அதைப்பற்றி சிறிதளவும் கவலைப்படாத ஊடகங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் ஊடக அறத்திற்குப் புறம்பாகவும் விவாத நிகழ்ச்சிகளை நடத்துவது வேதனையை அளிக்கிறது. இதனால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.