கடந்த ஆண்டு உலகளாவிய கொரோனா தொற்றுநோய் தாக்கம், கோடிக்கணக்கான மக்களை, முந்தைய சாதாரண வாழ்க்கை முறையில் இருந்து மாற்றியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது பாரம்பரிய மருத்துவங்களான ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்டவை இந்த கடுமையான சூழலில், உலக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் அது மிகை அல்ல. இந்நிலையில், கொரோனா மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைகள் அதற்கான நிலையான நெறிமுறைகளை குறித்து விவாதிக்க, கேரளாவைச் சேர்ந்த வைத்தியரத்தினம் குழு ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவர்கள், யோகா பயிற்சியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கின்றனர். கொரோனா 3வது அலை ஏற்படலாம், அது குழந்தைகளை அதிகம் தாக்கலாம் என அஞ்சப்படும் சூழலில், இந்த மாநாடு முக்கியத்துவம் பெருகிறது.