ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘விஜயமுருகன் தயாரித்து, இயக்கி உள்ள ‘ஜகா’ என்ற திரைப்படத்தின் ‘பர்ஸ்ட்லுக்’ போஸ்டரில் கொரோனா தொற்று சமயத்தில் கோயில்கள் எல்லாம் மூடப்பட்டு, கடவுள் சிவபெருமான் முக கவசம் அணிந்து, ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து சுவாசிப்பது போன்ற படத்தை வெளியிட்டு ஹிந்து மத நம்பிக்கையை அவமதிப்பது கண்டத்துக்குரியது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், ஹிந்து மத கடவுள்களை மட்டுமின்றி, எந்த மத கடவுள்களை அவமதிக்கும் விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. போஸ்டரை தடை செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். என்வே, படத்தில் சிவபெருமான் உருவகப்படுத்தப்பட்டுள்ளாரா அல்லது அது ஒரு சிவ யோகியா, இந்த போஸ்டர் வெளியிட்டதன் பின்னணி என்ன என்பதை படக்குழுவினர் உடனடியாகத் தெரிவித்து அனைவரின் சந்தேகத்தையும் போக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.