கோயில் நிலம் 306 ஏக்கர் மாயம்

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில், ஆய்வு மேற்கொண்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ‘ரங்கநாதர் கோயிலுக்கு 1866ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே உள்ளது. மற்றவை குடியிருப்பு, கடைகளாக மாறியுள்ளன. அதில் இருப்பவர்கள், மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடந்த பத்தாண்டுகளில் பராமரிக்கப்படாமல் உள்ள தமிழக கோயில்களில் ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. குடமுழுக்கு நடத்தாத கோயில்களின் எண்ணிக்கையை விரைவில் கண்டறிந்து, அங்கு குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும். ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள கோசாலையில் பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது’ என தெரிவித்தார்.