மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்றால் டுவிட்டர் நிறுவனத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது, அந்த நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதை தடுக்க மாட்டோம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரி வெளியேறியது ஏன்? இதை ஏன் நீதிமன்றத்தில் அறிவிக்கவில்லை. ஏன் புதிய இந்திய அதிகாரியை, நியமிக்கவில்லை. 15 நாட்களாக என்ன செய்தீர்கள் என டெல்லி உயர் நீதிமன்றம் டுவிட்டரை விளாசியது. இந்நிலையில், நாட்டின் சட்ட விதிகள்தான் முதன்மையானது. அதை டுவிட்டர் நிறுவனம் கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் என்று புதிதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.