சமூக ஊடகங்கள் மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த புதன் அன்று நியூ ஜெர்சி கோல்ஃப் மைதானத்தில் தனது பெட்மின்ஸ்டரில் ஒரு செய்தி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது, தொழில்நுட்ப நிறுவனங்களான கூகிள், யூடியூப், முகநூல், டுவிட்டர் மற்றும் அவர்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், சமூக ஊடகங்கள், தற்போது செய்துவரும் நியாயமற்ற நிழல் தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சுதந்திரமான பேச்சுரிமையை பாதுகாக்க வேண்டும். இவை, தகவல்தொடர்பு ஒழுக்கச் சட்டத்தின் பிரிவு 230ன் கீழ் அனுபவித்த பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்துள்ளன. இந்த வழக்கில், வரலாற்று வெற்றியை நாங்கள் அடைவோம் என தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு டுவிட்டர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. முகநூலும் கூகுளும்கூட உடனடியாக இதற்கு பதில் அளிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.