விவசாய சட்ட எதிர்ப்புப் போராட்டம் என்ற பெயரில், விவசாய ஏஜெண்டுகளால்டெல்லி, ஹரியானா எல்லைகளில் பல மாதங்களாக நடத்தப்படும் போராட்டங்களால், ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள சுமார் 50 டோல் பிளாசாக்கள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பலகட்ட பேச்சுவார்த்தைகள் இதில் பலன் அளிக்கவில்லை. ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை, தேவையான சட்ட சீர்திருத்தம் என அனைத்தையும் செய்யத் தயார் என மத்திய அரசு தெரிவித்தும் அவர்கள் வீண் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்ட்த் தொடர் தொடங்கும் ஜூலை 19ம் தேதி, பிரச்சனையை ஏற்படுத்தும் நோக்கில், நாடாளுமன்றம் நோக்கி அவர்கள் ஒரு பேரணியும் ஏற்பாடு செய்துள்ளனர்.