கர்ப்பிணியருக்கு தடுப்பூசி

உலகிலேயே அதிவேகமாக, அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாரதத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர், 45 வயதிர்கு மேற்பட்டோர், 18 வயதிற்கு மேற்பட்டோர் என வெவ்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இதில், தற்போது கர்ப்பிணியருக்கும் தடுப்பூசி செலுத்த, மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கர்பிணி பெண்களுக்கு, தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்றன. அதில், கர்ப்பிணியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கருச்சிதைவு உள்ளிட்ட உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கர்ப்பிணியருக்கு தடுப்பூசி செலுத்தலாம் என, நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையிலேயே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள், ‘கோவின்’ இணையதளத்தில் பதிவு செய்து அல்லது அருகில் உள்ள மையங்களுக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் அதனை செயல்படுத்த, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆவண செய்யவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.