பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சமூக ஊடக பிரச்சாரத்தை மேற்கொள்ள கங்கிரஸ் பணியமர்த்திய பிரச்சார நிறுவனம் ‘டிசைன் பாக்ஸ்’. இதன் இணை இயக்குனர் குஞ்சீத் கவுர், பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், அவர் ‘காங்கிரஸ் ஒருபோதும் பா.ஜ.கவை வெல்ல முடியாது. அவர்கள் மக்களுடன் சிறிதும் தொடர்பில் இல்லை. பா.ஜ.கவுடன் மோத காங்கிரசுக்கு முன் தயாரிப்புகள் ஏதுமில்லை. பின் எப்படி அவர்களால் வெல்ல முடியும்’ என பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டும் கிண்டல் செய்யப்பட்டும் வருகிறது.