ஒன்றியம், ஜெய் ஹிந்த் எதிர்ப்பு… இது எதுவுமே ஸ்டாலினின் திட்டமாக இருக்க முடியாது. அப்படிப்பட்ட பிரிவினைவாதி அல்ல அவர். அந்த பார்வையெல்லாம் அவர் கொண்டதே இல்லை. இது முற்றிலும் வேறு யாரோ பின்னாலிருந்து இயக்குகிறார்கள்.
இவ்வளவு விஷயங்களை செய்வதற்கு திருட்டு சாமர்த்தியம், தேவை, பிரிவினை எண்ணங்களை விதைக்க ஒருசிலரால்தான் முடியும். இந்த முறை மிகவும் துல்லியமாக திட்டமிட்டு, சரியாக காய் நகர்த்தி கொண்டு போகிறார்கள். ஹிந்து கோயில் நிலம்மீட்பு கூட ஒரு ஏமாற்று, திசை திருப்பும் வேலையாக இருக்கலாம். ‘பரவாயில்லை இந்த ஆட்சி’ என்று பெயர் எடுத்து பெரும்பான்மை ஹிந்துக்களை தன் வசப்படுத்தும் திட்டமாகவும் இது இருக்கலாம்.
வேளாண் மசோதா பற்றி கவர்னர் பேச மறுத்தபோது நீண்டஆலோசனை செய்தார் ஸ்டாலின் என்று செய்தி. அவருக்கு யார் ஆலோசனை சொல்வார்கள்? என்ன சிந்திக்க தெரியும் அவர் கட்சியினருக்கு? தமிழ் தேசியவாதம் பேசும் சில கிறிஸ்தவ தலைவர்களின் யோசனையை கேட்கக்கூட அந்த சிந்தனை இருந்திருக்கலாம்.
ஜகத் கேஸ்பர் மௌனம், இதர கிறிஸ்தவ தலைவர்கள் வெளிச்சத்துக்கு வராமல் அமைதி காப்பது எல்லாம் ஒரே இடத்தை நோக்கியே விரலை சுட்டுகிறது. முதலில் பிரிவினைவாத விஷத்தை தூவு, மக்களை எழுப்பி கிளர்ச்சி செய்ய வை, பிரிய வேண்டும் என்று பேச வை. மத மாற்றத்துக்கு அதுவே நிலம், உரம் எல்லாம்.
மொத்தமாக பிரிய முடியாது. சட்டம் தடுக்கும். ஆனால் கேரளம் போல குற்றங்கள் செய்ய மாநில துணை கிடைக்கும். சிங்களத்தில் சைனா வருகிறது. இந்த நேரத்தில் தமிழகம் பிரிவினை பேசினால்? தவறானவர்கள் கையில் மக்கள் சென்றால்? பிரிவினை வாதம் எடுபட்டு சாலையில் செல்லும் சாதாரண மக்கள் ஒத்துழைத்தால்?
ஆனந்த் வெங்கட்