மும்பையில் கடந்த 2008ல் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இத்தாக்குதலில் ஹெட்லிக்கு உதவிய அவரது நண்பரும் கனடா தொழிலதிபருமான தஹவூர் ராணா, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். ராணாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, நாடு கடத்தக் கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில், சி.பி.ஐ மனு தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதில் பாரதத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரும்பட்சத்தில் ராணா நாடு கடத்தப்படலாம். இதற்காக, சி.பி.ஐ., அதிகாரிகள் அமெரிக்கா சென்றுள்ளனர்.