பிராங்க்ளின் நிறுவனத்துக்கு அபராதம்

பங்குச் சந்தையில் பரஸ்பர நிதித் திட்டங்களை செயல்படுத்தும் சர்வதேச நிறுவனமான பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம், கடந்த 2020ம் ஆண்டு 6 நிதித் திட்டங்களிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இது செபி விதிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி ரூ.5 கோடி அபராதம் விதித்தது செபி. அந்த 6 திட்டங்கள் மூலம் நிர்வாகம் மற்றும் ஆலோசனைக் கட்டணமாக திரட்டிய ரூ. 512 கோடியை திரும்ப செலுத்தவேண்டும். புதிய பரஸ்பர நிதித் திட்டங்கள் எதையும் 2 ஆண்டுகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது என்றும் பங்குச் சந்தை பரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையமான செபி உத்தரவிட்டுள்ளது.